சாலை விபத்துக்கள் குறைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தலைமையில் சாலை விபத்துக்களை குறைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, நகராட்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் வைப்பது , சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இரவு நேரங்களில் சாலை சந்திப்பு மற்றும் வளைவுகளில் ஒளிரும் மின் விளக்குகள் , பேரிகாட் வைக்கவும், நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான பாதையை அமைக்கவும், போன்ற கிராமப்புறங்களில் சாலைகளின் தரத்தினை ஆராயவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.