சோமேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை கூட்டம்
கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலின் ராஜகோபுரம் கட்டுமான பணி கடந்த 2010ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆகியும் ராஜகோபுரம் முழுமையாக கட்டி முடிக்காததால் கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முக்கிய திருப்பணிகள் முடித்து, பாலாலயம் மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சங்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாலாலயம் வரும் மார்ச் 1ந்தேதியும், கும்பாபிஷேகம் வருகின்ற ஜுலை 12ம் தேதியும் நடத்த விழா கமிட்டி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதில் விழா கமிட்டியினர், உபயதாரர்கள், பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.