தென்மேற்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிசாத்தி, இ.ஆப தலைமையில் இன்று நடைபெற்றது. தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவவர்களுடன ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல் அவரசரகால போக்குவரத்து வழித்தடங்கள். போக்குவரத்து ஊர்திகளின் விரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும். சமுதாயக்கூடங்கள் திருமணமண்டபங்கள் பள்ளிகள் விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், நியாய விலைக்கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியன தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும். சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு ஜேசிபி புல்டோசர். மரங்களை வெட்டும் இயந்திரங்கள் போர்டபில் ஜெனரேட்டர்கள் டார்ச் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும் எனவும். அணைக்கட்டுகள் ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவிற்கு மலரய் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்கவேண்டும்.

அவசரக்காகங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள்/ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும். நடமாடும் மருத்துவ குழுக்கள், அவர்களின் தொலைபேசி எண்ங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும் மேலும், அவசரத் தேவைகள் / உதவிகள் / பேரிடர் கால வீடு / கால்நடை / மனித உயிரிழப்பு / போக்குவரத்து பாதிப்பு / சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட திர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இ.ஆப, தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்திரி வில்சன் ராஜசேகர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story