போட்டித் தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம்
போட்டித் தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக தலைமை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story