2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜக ஆலோசனை கூட்டம்
மக்களவை தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம்
௨௦௨௪ மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்து பாஜக எம்.பி}க்கள் அதிகம் பேர் வெற்றிப்பெற கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில், என் மண், என் மக்கள் நடைப் பயணம் குறித்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது : தெய்வீகமும், தேசியமும் இணைந்தது தான் பாஜகவின் கொள்கை. இந்தியா முழுவதும் வேண்டும் மோடி, மீண்டும் மோடி ஆட்சி என்பதை மந்திரமாக கொண்டு பாஜகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்பட இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிக அளவில் பாஜக எம்.பி}க்கள் வெற்றிப் பெற வேண்டும். 2024 தேர்தல் பணிகளில் கட்சித் தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.
என் மண், என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாஜக தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி முதல் சென்னை வரையும் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இதுவரை116 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைப்பயணம் செய்துள்ளார். 2024 ஜனவரி 6}ம் தேதி தருமபுரி மாவட்டத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை, ஊழல், லஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் திமுக அகற்றப்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த சீரழிவுகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 2024}ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் உலக நாடுகளில் உள்ள மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்தியாவில் உருவாக்கப்படும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தருமபுரி மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.வேடியப்பன், மாவட்ட பொதுச் செயலர் பிரவீண், பட்டியல் அணி மாநில செயலர் கே.கே.சாட்சாதிபதி, மண்டல தலைவர்கள் ஜெயக்குமார், சௌந்தரராஜன், தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்