அனைத்து கட்சியினருடன் இன்று ஆலோசனை கூட்டம்

அனைத்து கட்சியினருடன் இன்று ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் தொகுதியில் வேட்பாளர்களுடன் அனுமதியின்றி வாகனங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் தொகுதியில் வேட்பாளர்களுடன் அனுமதியின்றி வாகனங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் (தனி) தொகுதிக்கு வரும் ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, பிரசாரம் செய்யும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று பின்னரே, பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, அனைத்து வேட்பாளர்களுக்கும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில நேரங்களில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் கள ஆய்வு மேற்கொள்ளும்போது, அனுமதி பெற்ற வாகனத்திற்கு பின்னால், அனுமதி பெறாமல் பல்வேறு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அணி வகுத்து வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. தேர்தல் பரப்புரையில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால், அந்த வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விழுப்புரம் தொகுதியில், மேற்படி நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், இன்று (13ம் தேதி) மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story