நிலுவையில் உள்ள பணிகள் குறித்து துறை வாரியான அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் !!

நிலுவையில் உள்ள பணிகள் குறித்து துறை வாரியான அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் !!

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து துறை வாரியான அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து துறை வாரியான அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம். திருப்பத்துார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகளில் உள்ள நிலுவை பணிகள் குறித்து துறைவாரியான அலுவலர்களுடம் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் கர்ப்பகராஜ் கூறுகையில், பல்வேறு துறைகள் சார்பில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.பணிகளின் தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் திருப்பத்துார் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் வகையில் குழுக்களை அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அவர்களுடன் அவ்வப்போது கலந்தாய்வு மேற்கொண்டு, தயார் நிலைப்படுத்தப்பட வேண்டும். என கலெக்டர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story