துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
X

துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டம் 

ஆரணி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தலை அமைதியாக நடத்திடவும் ,வாக்குச்சாவடி மையங்களில் குறைபாடுகளை சரி செய்யவும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி ஆட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் கண்டிப்பாக இருக்க வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க வேண்டும் என்று பேசினார்.

Tags

Next Story