மருந்தகம் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

மருந்தகம் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

சின்னசேலம் மருந்தகம் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சின்னசேலம் போலீஸ்ஸ்டேஷனில் மெடிக்கல் கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் ஏஜென்சி ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சின்னசேலத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி முன்னிலை வகித்தார். பொதுமக்கள் பலர் போதை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதாக புகார் எழுந்தையொட்டி, மெடிக்கல் கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் ஏஜென்சி ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது. போதை தரக்கூடிய இருமல் மருந்து, துாக்கம் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு விற்பனை செய்யும் மெடிக்கல் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூரியருக்கு வரும் பார்சல் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story