பெரம்பலூரில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம்
அரசு பள்ளியில்பயிலும் மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெறுவது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரசுப்பொதுத் தேர்வினை எளிதாக எதிர்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம்,., தலைமையில் பிப்ரவரி 27ம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. மேல்நிலை இரண்டாமாண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி அன்று தொடங்கி மார்ச்22ம் தேதி அன்று முடிவுபெறவுள்ளது.
மேல்நிலை முதலாமாண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் 04.03.2024 அன்று தொடங்கி 25.03.2024 அன்று முடிவு பெறவுள்ளது. பத்தாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி அன்று முடிவுபெறுகிறது. மேல்நிலைத் தேர்வுகளுக்கு 35 தேர்வு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பொதுத்தேர்வில் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 3,850 மாணவர்கள், 3,823மாணவிகள் என மொத்தம் 7,673 மாணவ மாணவிகள் தேர்வெழுத உள்ளார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 3,558 மாணவர்கள், 3,536 மாணவிகள் என மொத்தம் 7,094 மாணவ மாணவிகள் தேர்வெழுத உள்ளார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 141 பள்ளிகளைச் சேர்ந்த 4,376 மாணவர்கள், 3,627 மாணவிகள் என மொத்தம் 8,003 மாணவ மாணவிகள் 42 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை எழுத உள்ளார்கள். . பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளக் கூடிய அனைவரும் 100சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் அந்த இலக்கினை அடைவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்டக் இடைநிலை கல்வி அலுவலர் ஜெகநாதன், தேர்வுத் துறை உதவி இயக்குனர் கல்பனாத் ராய், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.