பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
போலீசார் ஆலோசனை
வேலூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரர் ரங்கசாமி தலைமையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களை தவிர பாட்டில்கள் மற்றும் கேன்களில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் டோக்கன் பெற்றுக்கொண்டு டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை ஏதும் செய்யக்கூடாது.
பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருப்பதால் ஒட்டு மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய வேண்டும்.
இதில் ஏதேனும் தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அறிவுரை வழங்கினர்.