கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
கெங்கவல்லி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக. அதிமுக, தேமுதிக பாஜ காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர் நேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும் அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்த மற்றும் பிரசாரம் செய்வதற்கு இணையதளத்தில் அனுமதி பெற வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடம், தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தும், அரசியல் கட்சிமுக்கிய தலைவர்கள்வருகையை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் பரசுராமன், ஈஸ்வரி மற்றும் அலுவலர்கள் சுலந்து கொண்டனர்