தேர்தல் செலவினங்களை காண்கணிக்கும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி. இ.ஆ.ப. தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் செலவினங்களை காண்கணிக்கும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024- ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி. தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூடுதல் ஆணையாளர் வருமான வரித்துறை கான்பூர் சந்தோஷ்குமார், ஐ.ஆர்.எஸ். பெங்களுரு துணை ஆணையர் (சுங்கம்) பிரமோத்நாயக், ஐ.ஆர்.எஸ்., ஆகியோர் முன்னிலையில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று 31.03.2024 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அருண்மொழித்தேவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சையது முகைதீன் இப்ராஹீம், தேர்தல் செலவின கண்காணிக்கும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story