வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
வேலூரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வேலூரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் - 2024 முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் - 2024 முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2024 இன் கீழ் வாக்காளர் பட்டியல் உத்தரவிட்டது, அதன்படி வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் / மாநகராட்சி ஆணையர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலகம் / வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி மைய அலுவலரிடமும், சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சிறு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி,ஏற்கனவே பெறப்பட்டுள்ள மனுக்களில் வேலூர் வட்டத்திற்குட்பட்ட கருகம்புத்தூர், அலுமேலுரங்காபுரம் மற்றும் சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நேரடி கள ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டார். பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை கருவியின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.