விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

கலந்தாய்வு 

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது.

விழுப்புரம் அரசு கல்லுாரியில் இன்று 24ம் தேதி பி.எஸ்சி., - பி.சி.ஏ., பாடப்பிரிவிற்கும், 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., வரலாறு, பொருளியல், விண்ணப்பித்த தொழிற்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ம் தேதி பிற்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், அருந்ததியர், மலைவாழ் வகுப்பினருக்கான அனைத்து பாடப்பிரிவுகள், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை நகல்களுடன், உரிய சேர்க்கை கட்டணத்தையும் எடுத்து வர வேண்டும்.

Tags

Next Story