மதுரவாயல் அருகே அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

மதுரவாயல் அருகே அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

மதுரவாயல் அருகே அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மருத்துவர் பிரேம்குமார் போட்டியிடுகிறார் இந்த நிலையில் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட 14 5 , 147 வது வார்டு பகுதியில் தேர்தல் பணிமணை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், டி .கே. எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் டி .கே. எம். சின்னையா மோடி, அமித்ஷா போன்றவருக்கு அஞ்சாமல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு துணிச்சலாக எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்துள்ளார் என்றும் அவர்களுடன் கூட்டணி வைத்ததாலே நாங்கள் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாகவும் மேலும் சிறுபான்மையினர் இஸ்லாமியர், கிறிஸ்தவர் வீட்டிற்கு ஓட்டு கேட்டு சென்றால் உள்ளே வரவிடாமல் கதவை சாத்தியதாகவும்,

பிஜேபியுடன் கூட்டணி வைத்ததாலே எங்களுக்கு விழ வேண்டிய ஓட்டுகள் விழாமல் போனதாகவும் கூறிய அவர் தற்போது பிஜேபியை விட்டு தைரியமாக வெளியே வந்ததால் சிறுபான்மையினர் தங்கள் ஓட்டுக்களை தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு போடுவதாகூறினார். மேலும் இந்த தொகுதியில் எம்பியாக உள்ள டிி ஆர் .பாலு 80 வயதுக்கு மேல் கடந்ததால் அவரால் தொகுதி பக்கமே வர முடியவில்லை எனவும் பிரச்சாரம் செய்ய முடியாமல் பாதியிலேயே சென்று விடுவதாகவும் கூறினார்.

எனவே அவர் வரும்போது பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் எனவும் அவருக்கா உங்கள் ஓட்டு என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் பேசினார்.

Tags

Next Story