பறக்கும் படை அலுவலர்களுடனான கலந்தாய்வு 

பறக்கும் படை அலுவலர்களுடனான கலந்தாய்வு 
X

பறக்கும் படை அலுவலர்களுடனான கலந்தாய்வு 

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பறக்கும் படை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் பறக்கும் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால நேரத்திற்கு அதிகமாக ஒரு இடத்தில் நிற்காமல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியான ஊடக ஒட்டுவில்லைகள் ஒட்டி செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து போலியான வாகனம் மற்றும் ஊடகத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story