மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை: எம்.பி., கனிமொழி பங்கேற்பு

மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை: எம்.பி., கனிமொழி பங்கேற்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் குறித்து துத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர்களுடன், எம்.பி., கனிமொழி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது; உடன் அமைச்சர்கள் நேரு, கீதா உட்பட பலர் உள்ளனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் குறித்து துத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர்களுடன், எம்.பி., கனிமொழி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ரகுமத் நகர் முத்தம்மாள் காலனி ராம்ஜி நகர் அம்பேத்கர் நகர் ஸ்டேட் பேங்க் காலனி வி எம் எஸ் நகர் தேவர் காலனி கதிர்வேல் நகர் பிரேம் நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு நாள் ஆகியும் மழைநீர் வழியாத காரணத்தால் மழை நீரை வடியை வைப்பது குறித்தும் அந்த பகுதியை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர்கள் கே என் நேரு கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் மாமன்ற உறுப்பினர்களிடம் தங்கள் பகுதியில் மழை நீரை எவ்வாறு அகற்றுவது மற்றும் சீரமைப்பது நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Tags

Next Story