கள்ளக்குறிச்சியில் தேர்தலை முன்னிட்டு அலுவலர்களுடன் கலந்தாய்வு

கள்ளக்குறிச்சியில் தேர்தலை முன்னிட்டு அலுவலர்களுடன் கலந்தாய்வு


லோக்சபா தேர்தலையொட்டி, மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.


லோக்சபா தேர்தலையொட்டி, மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

லோக்சபா தேர்தலையொட்டி, மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓட்டுச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், பதற்றமான ஓட்டுச்சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் சின்னம் பொருத்தும் கருவி, ஓட்டுப் பதிவு கருவி, கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் கருவி, வேட்பாளர்களின் எண்ணிக்கை அமைத்தல். வேட்பாளரின் பெயர் பொருத்தும் பணியின் போது கவனிக்க வேண்டியவை, ஓட்டுப் பதிவிற்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஓட்டுப்பதிவு, ஓட்டுப்பதிவு முடிவுறும் நிலை, இயந்திரங்களுக்கு சீல் வைத்தல், வாக்காளரின் வயதை குறித்து அறிவித்தல், ஆய்வுக்குரிய ஓட்டுச் சீட்டுகளை சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் ஓட்டுபதிவிற்கு முந்தைய நாள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர தேர்தல் பொருட்கள் வழங்கப்படும்போது அனைத்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளதா என சரிபார்ப்பது. ஓட்டுப்பதிவு நாளன்று மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பழுதடைய நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story