குடிப்பெயர்வு குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

குடிப்பெயர்வு குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
குடிப்பெயர்வு குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்,சதுரங்கப்பட்டியில் தமிழ்நாடு டொமஸ்டிக் ஒர்கர் வெல்பேர் அறக்கட்டளை சார்பில் புலம்பெயர்வோர் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான குடிப்பெயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு டொமஸ்டிக் ஒர்கர் வெல்பேர் அறக்கட்டளை சார்பில் புலம்பெயர்வோர் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான குடிப்பெயர்வு குறித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட கள பணியாளர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட கள பணியாளர் ஜெயந்தி அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலம் வெளிநாடு செல்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் போலி முகவர்கள் மூலம் ஏமாறுவதை தடுக்க வேண்டும், அதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்புதான் இந்த கூட்டமைப்பு இந்த கூட்டமைப்பில், காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்,வருவாய்த்துறை அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், வருவாய்துறை உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

அமர்வில் முக்கிய தீர்மானங்களாக சதுரங்கப்பட்டினம் பஞ்சாயத்தில் வேலைக்காக புலம் பெயர்கின்ற தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்கள் தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு அரசு அங்கீகாரம் இல்லாமல் பணிக்கு அனுப்புகின்ற முகவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது,கிராம நிர்வாக அலுவலகத்தில் புலம் பெயர்கின்ற தொழிலார்களின் ஆவணங்களை பராமறிக்க வாய்ப்புகளை உறுவாக்குவது,பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான பருவ மாற்றம் மற்றும் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story