விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் சங்ககிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பவர்கிரேடு, தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் சார்பில் மின்பாதை அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட பகுதியாக இழப்பீடுகளை வழங்கி வருகிறன்றன. அவ்வாறு வழங்கப்படும் இழப்பீடுகள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. இழப்பீட்டில் கிணறு, ஆழ்துளைகிணறு ஆகியவற்றுக்கு இழப்பீடு தருவதிலும் மேலும் மின்கோபுரம் அமையும் நிலம், மின்கம்பி செல்லும் நிலம் ஆகியவற்றிக்கு இழப்பீடு தருவதிலும் பாரபட்சம் தொடர்கிறது. அதனை சரி செய்ய மத்திய, மாநிலரசுகளை வலியுறுத்தி 2024ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பது, அது குறித்த துறை சார்ந்த அமைச்சர்களை சந்திப்பது, மற்ற விவசாய சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்துவது, விரைவில் கிராமம், வட்டார அளவில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணை செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் முனுசாமி, சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சங்ககிரி தமிழ்நாடு விவாசயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளை செயலாளர் ராஜேந்திரன், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். .
