தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்.
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம். நேற்று மாலை தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா. தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி. ஆ காவல் பொது பார்வையாளர் விவேக் ஷிபாய். இ.கா.ப , தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ்குமார் ஐ.ஆர்.எஸ். பிரமோத் ஐ.ஆர்.எஸ். , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் முன்னிலையி நடைபெற்றது. இதுகுறித்து தருமபுரிதேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையிடம் 48 மணிநேரத்திற்கு முன்பாக நேரிவோ இணையவழியிலோ மொபைல் ஆப் வழியாக முறையாக விண்ணப்பித்து, அனுமதிபெற்ற பின்பு அமைதியாக நடத்திட வேண்டும். இந்நிகழ்வுகளில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து அனுமதி வழங்கப்படுவதோடு. தொடர்ச்சியாக அடுத்த அடுத்த விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அமைதியான மற்றும் சுமூகமான வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்வதற்கும். வாக்காளர்கள் எந்தவித தொந்தசயுமின்றி தங்கள் வாக்குரிமைை பயன்படுத்துவதற்கும். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களை (Observers) நியமித்துள்ளது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை குறித்து எந்தவிதமான புகார் அல்லது பிரச்சனை இருந்தாலும், அதை பார்வையாளரின் . 1800 425 7017 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9363754336 என்ற எண்ணிற்கு வாட்சப் குறுந்தகவல் உள்ளிட்டவை மூலம் புகார் தெரிவிக்கலாம். மேலும், இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக்கான வழிகாட்டுதல்கள். வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட பொறுப்பு வகிப்பவர்களுக்கான வாகன அனுமதி. தேர்தல் பிரச்சாரத்திற்காக இருசக்கர வாகனம் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள், ஊர்வலங்கள் தொடர்பான விதிமுறைகள், கொடிகளின் பயன்பாடு. குறுஞ்செய்தி சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடை செய்தல், பிரச்சாரம் முடிந்த பின்பு தொகுதியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதற்கான கட்டுப்பாடுகள், பொது நிதியிலிருந்து விளம்பரங்கள் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் தேர்தல் தொடர்பான மாதிரி நடத்தை விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மேட்டூர் சார் ஆட்சியர்என்.பொன்மணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள். அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
Next Story