போர்க்கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

போர்க்கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

போர்க்கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்


போர்க்கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதியில்,மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் போர்கால நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு‌. பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் செய்யூர் வட்டாட்சியர் சரவணன் , மிக்ஜாம் பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி உதவி இயக்குநர் சாந்தி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி, அன்பரசு, பவூஞ்சூர் வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ்குமார், வட்டார தலைமை மருத்துவர் கங்காதரன் , செய்யூர் காவல் ஆய்வாளர் நந்தகோபால்,

அனைக்கட்டு காவல் உதவி ஆய்வாளர் தேவதாஸ், தீயணைப்பு துறை செய்யூர் பிரிவு அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சி விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழினி, திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story