விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீ பெரும்புதுாரில் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நடந்தது.

ஸ்ரீ பெரும்புதுாா் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். எஸ்.பி. சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, கூடுதல் எஸ்.பி. அனிகேத் அஷோக் மற்றும் அதிகாரிகள்கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளா் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும் வேட்பாளரது முதன்மை முகவா் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும் வேட்பாளரது பணியாளா் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் கோரும்பட்சத்தில்அக்கட்சியினை சோ்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளா்கள் தோ்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக, ஒரு வாகனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

மேற்படி வாகனத்துக்ான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சியின் கணக்கில் சோ்க்கப்படும். அரசியல் சாா்ந்த நிகழ்வுகளுக்கு கீழ்கண்டுள்ள வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்துக்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்ட வேண்டும். மேற்கண்டுள்ள அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளா்களை ஏற்றிச்செல்லக் கூடாது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி மற்றும் மெகா போன் பயன்படுத்தக்கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவா் மட்டுமே வாக்குச்சாவடியில்அனுமதிக்கப்படுவா் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story