பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், போதைப் பொருட்களை தடுத்தல், மாணவர்களுக்கிடையே சாதி வேறுபாடுகளை களைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பள்ளி மேலாண்மைக்குழு இணைந்து செயல்படுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், முன்னுரிமை அடிப்படையில் முதல் ஐந்து தேவைகள் பட்டியலிடப்பட்டு அதை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டன

. பள்ளியின் தேவைகளை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உறுப்பினர்களுடன் கலந்து பேசி பள்ளி அளவிலேயே சரி செய்வது, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள், போக்குவரத்து வசதிகள், கழிப்பிட வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைகளை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

சிறந்த செயல்பாடுகளை கொண்ட பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இது போன்று இதர ஒன்றிய பள்ளிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story