கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனம் அருகே பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் இருந்து வீட்டில் உள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி சென்னை கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவை அடுத்து வசக்காளிபாளையம் அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நிரூபன்(வயது 33) என்பவர் லாரியை ஒட்டினார். திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த நிரூபனை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் ஒலக்கூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story