கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

விபத்து 

வாலாஜா அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பெங்களூருவில் இருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினார். இது குறித்து வாலாஜா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story