தொடர் மழை எதிரொலி : காய்கறிகளின் விலை கடும் உயர்வு.

தொடர் மழை எதிரொலி :  காய்கறிகளின் விலை கடும் உயர்வு.

பைல் படம் 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான காய்கறிகள் நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஓசூர், பெங்களூர், மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக காய்கறிகள் விலைஅதிகரித்து வருகிறது.

ஒருகிலோ பீன்ஸ்.220 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. 55 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட மிளகாய் 130 ரூபாய்க் கும்,15 ரூபாய்க்கு விற் கப்பட்ட, தக்காளி 25 ரூபாயாக உயர்ந்தது. கேரட் 100 ரூபாய், கோழி அவரை 140 ரூபாய், வெள்ளரிக்காய் 30 ரூபாய், தடியங்காய் 30 ரூபாய், பல்லாரி 35 ரூபாய், சேனை 70 ரூபாய், இஞ்சி 200 ரூபாய், பூசணிக்காய் 30 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய், கத்தரிக்காய் 60 ரூபாய், காலிபிளவர் 35 ரூபாய், பூண்டு 250 ரூபாய், உள்ளி 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Tags

Next Story