வரும் 13ல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

வரும் 13ல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி பேராவூரணியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. 

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி பேராவூரணியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

தஞ்சை மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம், சேதுபாவாசத்திரத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சேகர், நாகேந்திரன், சகாபுதீன் மற்றும் மூத்த தோழர் வீ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கலந்து கொண்டு வழி நடத்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில், குடிமனைப் பட்டா இல்லாத ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பள்ளத்தூர், மறவன்வயல், செந்தலைவயல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, அழகியநாயகிபுரம், இரண்டாம் புலிக்காடு, கொரட்டூர், கீழக்கழனிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காத்திருக்கும் நிலையில் உள்ளது. எனவே, வருவாய்த் துறையினர் தகுதி உள்ளவர்களுக்கு குடிமனைப்பட்டா தாமதம் இன்றி வழங்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் படகுகள் செல்லும் வகையில், முகத்துவாரங்களை தூர்வாரி உடனடியாக சீரமைக்க வேண்டும். சீகன்காடு பகுதியில் விவசாயிகளின் பாசன வசதிக்காக மும்முனை மின்சாரம் கேட்டு, அதற்காக பணம் கட்டியும், மின்சாரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பெற்றும், நீண்ட காலமாக தனிநபர் எதிர்ப்பு காரணமாக விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் காவல்துறை ஒத்துழைப்புடன் மின்வாரியம் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மறவன் வயல் கிராமத்தில் ஊராட்சி மன்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைத்த சாலை, தனிநபர் இடையூறு காரணமாக, பணி முடியாமல் பாதியில் நிற்கிறது. எனவே, அந்த சாலையை அமைத்து தர வேண்டும். மேலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் பிப்.13ஆம் தேதி அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது" என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story