தொடர் வேலை நிறுத்த போராட்டம் : லாரி உரிமையாளர் சங்கம்

தொடர் வேலை நிறுத்த போராட்டம் : லாரி உரிமையாளர் சங்கம்

தொடர் வேலை நிறுத்த போராட்டம்


திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரவிந்த் பாபு தலைமையில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 100 க்கு மேற்பட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டு,கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் தமிழக அரசு கொண்டு வந்த காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஆன்லைன் வழக்கு பதிவு செய்வதை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ,மேலும் அரசு மணல் குவாரிகளை உடனடியாக தமிழக அரசு திறக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சரக்கு லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் அரவிந்த் பாபு கூறுகையில் தமிழக அரசு கொண்டு வந்த காலாண்டு வரி உயர்வை உள்ளிட்ட எங்களுடைய மூன்று அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்ற தாமதம் செய்தால் எங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

மற்றும் திருவண்ணாமலையில் 500 சரக்கு லாரி மற்றும் 300 மண்பாடி லாரி என 800-க்கும் மேற்பட்ட லாரிகள் இன்று நிறுத்தி வைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் ,மாவட்ட பொருளாளர் ,அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story