வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் போராட்டம்

வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் போராட்டம்

மனு அளிப்பு

தமிழ் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி 18.வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் பேருராட்சிக்கு உட்பட்ட தங்கசாலை அருந்ததியர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 18.வது நாளில் கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம்.நடந்து வருகிறது .

போராட்டம் அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்/ தலைவர் சு.அகத்தியன் தலைமையிலும் பொதுச் செயலாளர் இரா செந்தில், மாநில மகளிர்பொதுச் அணிச் செயலாளர் அம்சவேணி கனகராஜ் ம. பொல்லான் மாநில தலைமை நிலையச்செயலாளர், திருப்பூர் மாவட்ட தலைவர் மு பிரகாஷ் ஆகியோர் முன்னிலையிலும் மனித உரிமை ஆணையத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில்,

தேசிய மனித உரிமை ஆணைத்துக்கும் தமிழ்நாடு நாடு முதல்வர் அவர்களுக்கும் 12/2/2024 தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தங்கசாலை வீதியில் ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய வாடகை வீட்டில் வசிக்கும் அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் விபரம், வெண்ணந்தூர் கிராம நிர்வாக அதிகாரியிடம், அமைச்சர் மதிவேந்தன் , தமிழ்நாடு முதல்வர்க்கு தபால் மூலம் ராசிபுரம் வட்டாட்சியரிடம் கோட்டாட்சியர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை.

ஆகவே மீண்டும் 28/11/2023 ம் தேதியன்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டது. இப்போதும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை அதிகாரிகள் தமிழ்நாடு அரசிடம் முறையாக விசாரணை செய்து அறிக்கை கொடுத்திருந்தால் தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கும் ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் இன்று வரை அருந்ததியர் சமுக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது.

ஆகவே தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குடியரசு தினத்தன்று அதிகாரிகளை கண்டித்து.தொடங்கிய போராட்டம் 18 வது நாளாக கருப்புக்கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இப் போராட்டத்தின் மூலமாகவது தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட உத்தரவு பிறப்பிக்குமாறு அருந்ததியர் சமுக மக்களுக்களின் சார்பிலும். தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் கேட்டு கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story