கனிமவள லாரிகளால் தொடரும் விபத்து

கனிமவள லாரிகளால் தொடரும் விபத்து
இன்று காலை கனிம வள கடத்தல் லாரியால் நடந்த விபத்து
நாகர்கோவிலில் கனிமவளம் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று காலையில் வெட்டூர்ணிமடம் பிரதான சாலையில் வைக்கப்பட்ட சென்டர் மீடியனை இடித்து கனிம வள வாகனம் சேதப்படுத்தியது. இந்த பகுதி காலை முதலே அதிக பிஸியான மக்கள் போக்குவரத்து அதிகமான பகுதியாகும். இந்த பகுதியில் பல மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், தேவாலயங்கள் என இருக்கும் சாலையில் கண்மூடித்தனமாக வரும் கனிமவள லாரிகளால் அதிகம் விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டுபவர்கள் தங்கள் கைபேசியில் பேசியும் வாட்சப் தகவலை பரிமாரியும் வருவதால் தான் இம்மாதிரியான விபத்துக்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது நாகர்கோவில் மாநகரில் மட்டும் தினமும் சொல்லி வைத்தது போல் சென்டர் மீடியன் தடுப்பில் தினம் விபத்து ஏற்படுவதன் பின்னணி என்ன? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags

Next Story