மின் நிறுத்தத்தில் தொடர் குளறுபடி : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டுகோள்

மின் நிறுத்தத்தில்  தொடர் குளறுபடி : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டுகோள்

ரவிச்சந்திரன்

நாமக்கல் நகரில் மின் நிறுத்தத்தில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடிகளை மாவட்ட ஆட்சியர் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் K.ரவிச்சந்திரன், வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் நகரில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் நடைபெறுவது வழக்கம் ஆனால் மின்னிறுத்தம் அறிவிப்பு தேதி அறிவித்தவுடன் நாமக்கல்லில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து வைப்பார்கள்.. அன்று மாலையை திடீரென்று மின் நிறுத்தம் இல்லை என்று அறிவிப்பு வரும். பின்பு அவர்கள் வழக்கம் போல் பணிகளை செய்யும்பொழுது திடீரென்று மின் நிறுத்தம் என்று அறிவிப்பு வரும் இது இன்று நேற்று அல்ல தொடர்ந்து இது போன்ற குளறுபடிகள் நடந்து வருகிறது நாமக்கல்லில் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஏன் இந்த விஷயத்தில் மெத்தனப்போக்கோடு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை..?

இவர்கள் செய்யும் தவறுகளால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நேற்று... இன்று..‌ மின் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு இன்று மின் நிறுத்தம் இல்லை என்று அறிவிக்கிறார்கள், ஆகையால் இதுபோன்ற தொடர் குளறுபடிகளை கைவிட்டு நன்கு ஆலோசனை செய்து அதற்குப் பிறகு மின் நிறுத்தம் அறிவிப்பு செய்தால் மட்டுமே நாமக்கல்லில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் தங்கு தடை என்று தங்களது பணிகளை செய்ய இயலும் பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும், அரசுக்கும் நல்ல பெயர் ஏற்படும் ஆகையால் மாவட்ட ஆட்சியர் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி இது போன்ற குளறுபடிகளை இல்லாமல் செய்ய ஆவணம் செய்ய அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story