குமரி மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை -  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X
நாகர்கோவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இன்று அதிகாலை முதல் அது தீவிர கனமழையாக பெய்ய தொடங்கியுள்ளது.தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அனைத்து பகுதிகளுமே போக்குவரத்து இன்றி வெறிச்சோடி, மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இதுபோன்று பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. குழித்துறையாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீரும் திடீரென திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story