மூன்று நாட்களாக பெய்த தொடர் மழை

மூன்று நாட்களாக பெய்த தொடர் மழை

மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் சேலத்தில் வெயில் தாக்கம் குறைந்தது.


மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் சேலத்தில் வெயில் தாக்கம் குறைந்தது.
சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை நேற்று 98.1 டிகிரியாக சரிந்தது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதமாக வெயிலின் கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரலில் ஒரு சில நாட்கள் மழை வரும். ஆனால் கடந்த டிசம்பரில் இருந்து ஏப்ரல் கடைசி வரை ஒரு மழைக்கூட வரவில்லை. இதனால் வறண்ட வானிலையே நீடித்தது. சேலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 108.2 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. வெயிலின் தாக்கம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை இல்லாததால் பல நீர்நிலைகள் வறண்டு போனது. மழை வந்து கோடை வெப்பத்தை குறைக்காத என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மறுநாள் 5ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. இம்மழையால் சற்று வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் 11ம் தேதி அரை மணி நேரம் மழை பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று மதியம் அரை மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. மூன்று நாட்களாக பெய்த மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் இரவில் குளிர்காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலத்தில் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் 102 முதல் 106 டிகிரி வெப்பநிலை நீடித்தது. 10ம் தேதி 101 டிகிரியும், 11ம் தேதி 98.7 டிகிரியும், 12ம் தேதி 96.8 டிகிரியும், நேற்று 98.1 டிகிரியாக வெப்பநிலை சரிந்தது.

Tags

Next Story