மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்பந்த பணியிடங்கள்

மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்பந்த பணியிடங்கள்

மாவட்ட ஆட்சியா்  ஸ்ரீதா் 

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் பிஎன் ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பிஎன் ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒரு தகவல் மேலாளா் மற்றும் ஒரு ஆய்வக உதவியாளா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தகவல் மேலாளா் பணியிடத்துக்கு, கணினி அறிவியலில் முதுநிலைப்பட்டம் அல்லது பொறியியல் பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும். மாத தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

ஆய்வக உதவியாளா் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு எனவும், மாத தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரத்து 500 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தொடா்பான தகுதிகள், வயது வரம்பு, இனசுழற்சி மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து ஜூலை 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகா்கோவில் 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story