நகராட்சியை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

நகராட்சியை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

நகராட்சி அலுவலகம் 

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பணிக்குச் செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் 18 வார்டுபகுதிகளிலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து பணிக்குச் செல்லாமல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தையை ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

Tags

Next Story