வத்திராயிருப்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளுக்கும் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த 19 தூய்மை பணியாளர்களையும் அவர்கள் பணியாற்றிய வார்டுகளை விட்டு மாற்றி வேறு வார்டுகளுக்கு மாற்றியதால் வேலைக்கு செல்லாமல் முத்தாலம்மன் பஜார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒவ்வொரு பணியாளர்களிடமிருந்து ரூபாய் 35 எடுத்துக் கொள்வதாகவும் தங்களுக்கு முழு சம்பளம் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தங்களை பணி செய்ய நிர்பந்தம் செய்வதாகவும்,இதனால் தங்களது அன்றாட வேலைகளில் வீடுகளில் செய்ய முடிவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் தங்களுக்கு வழங்கக்கூடிய முழு சம்பளம் வழங்க வேண்டும்.தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய வாடுகளில் தங்களை பணியில் அமர்த்த வேண்டும் வேலை நேரம் குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து முத்தாலம்மன் பஜார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து வார்டுகளிலும் வீடுகளிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.