நெல்லில் குருத்து ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை

நெல்லில் குருத்து ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை

பைல் படம் 

நெல் பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பறக்கை மற்றும் புத்தளம் பகுதியில் மழை நீர் வடிந்துள்ள நெல் வயல்களை கன்னியாகுமரி வேளாண்மை இணை இயக்குனர் ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வின் போது விவசாயிகளிடம் அவர்கள் கூறுகையில் :- குருத்து ஈ தாக்குதலினால் பயிரின் இலைகள் சுருங்கி இளம் இலைகளின் நுனிகள் மடிந்து காய்ந்து கீழ்புறமாக தொங்கும். இவற்றின் தாக்குதலினால் 25 சதவீதத்திற்கும் மேல் பொருளாதார சேதநிலையை தாண்டும் போது, வயலின் நீரை வடிய விட்டு பின் மாலை வேளையில் பூச்சிக்கொல்லிகளான குலோர் பைரிபாஸ் 20 சி ஈசி 1250 மில்லி (எக்டருக்கு )அல்லது பிபடரோனில் 5% எஸ் சி 1000 - 1500 கிராம் (எக்டருக்கு) என்ற அளவில் தளித்து குருத்து ஈயை கட்டுப்படுத்தலாம் என கூறினார்.

Tags

Next Story