குமரியில் கனிம வள லாரிகளுக்கு கட்டுப்பாடு

குமரியில் கனிம வள லாரிகளுக்கு கட்டுப்பாடு
குமரி மாவட்ட எஸ் பி சுந்தர வதனம்
முறையான அனுமதி சீட்டு, ஆவணங்கள் இல்லாத கனிம வள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதை அடுத்து கடந்த 20 ஆம் தேதி முதல் டாரஸ் லாரி குமரி மாவட்டத்தில் வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாவட்டத்திற்குள் நூழய தடை விதிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், - கனிம வளங்கள் ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தான் மாநகருக்குள் வர வேண்டும். கனிமங்கள் கொண்டு வருபவர்கள் கண்டிப்பாக முறையான அனுமதி சீட்டு வைத்திருக்க வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் கனிம வளங்கள் கொண்டுவரப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. முறையான அனுமதி சீட்டு, ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story