சிறுவர் பூங்கா அமைப்பதில் வாக்கு வாதம்: பணிகள் நிறுத்தி வைப்பு..!
வாகுவாத்தில் ஈடுப்பட்ட இருதரப்பினர்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சி வடசந்தையூர் பகுதியில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை என்ற பெயரில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் மதிப்பில்.2 ஏக்கரில் நிலம் புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை கூடுவதால் பூங்கா அங்கு அமைக்கக் கூடாது என சிலரும், காலி இடமாக உள்ளதால் சந்தை கூடாத நாட்களில் மதுபானம் அருந்தும் இடமாக உள்ளதால் பூங்கா அமைக்க வேண்டும் என சிலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பிலும் ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் பூங்காவிற்கான பணியில் நடைபெற்றது. பூங்கா அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த சிலர் தடுக்க முயன்றதால் இருதரப்பினர் இடையே.வாக்கு வாதம் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பூங்கா பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.