கார்த்திக் சிதம்பரம் குறித்து சர்ச்சை போஸ்டர்
சிவகங்கை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசியல் களத்தில் போஸ்டர் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சித்து அரசியல் கட்சியினர் ஓட்டும் போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த போஸ்டரில் "காணவில்லை.
கண்டா வர சொல்லுங்க! கையோடு கூட்டி வாருங்க.! தொலைந்த நாள்: நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு, அடையாளம்: முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் என்பது மட்டுமே, நெட்ப்ளிக்ஸ்-ல் படம் பார்த்துக்கொண்டும்,
சமூக ஊடகங்களில் மோடியை புகழ்ந்து கொண்டும் தொகுதி மறந்து சுற்றித் திரியும் அவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவண்: வாக்களித்து ஏமாந்த பொதுமக்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சிவகங்கை மாவட்டம்" என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.