சேலம்-மயிலாடுதுறை ரெயில் மெமு ரெயிலாக மாற்றம்
சேலம்-மயிலாடுதுறை ரெயில்
சேலம்-மயிலாடுதுறை ரெயில் மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள்) ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) மற்றும் மயிலாடுதுறை- சேலம் ரெயில் (வண்டி எண்-16811) நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் உள்ள பெட்டிகள் மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள்) பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. அதன்படி சேலம்-மயிலாடுதுறை ரெயில் வருகிற 7-ந் தேதியும், மயிலாடுதுறை-சேலம் ரெயில் வருகிற 8-ந் தேதியும் மெமு ரெயிலாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Next Story