சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்  பட்டமளிப்பு விழா
X

பட்டமளிப்பு விழா 

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 26-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி துணை முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன், தமிழ்நாடு அரசின் சட்ட கல்வி இயக்குனர் விஜியலட்சுமி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தார்வேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசும்போது, வக்கீல் தொழிலால் மட்டுமே அனைத்து மாற்றங்களையும் சமூகத்தில் கொண்டு வர முடியும். எந்த ஒரு மாற்றமும் நம்மிடம் இருந்தே வரும். அதற்கு வக்கீல்களாகிய நீங்கள் லட்சியத்தை நோக்கி செல்ல தொடர்ந்து நீதிமன்ற நிகழ்வுகளையும், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளையும் எப்படி கையாள்வது என்பதனையும் தினமும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், என்றார். இதில், கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், இணை நிர்வாக அதிகாரி சுகந்தி, கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரி டீன் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி பேராசிரியை நிவேதப்பிரியா நன்றி கூறினார்.

Tags

Next Story