சாலை விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜேக்கப் அலெக்ஸாண்டர் (52) இவர் கடலில் செல்லும் விசைப்படகு சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மனைவி பிள்ளைகளுடன் அம்மாண்டி விளை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் சம்பவதினம் மாலை வேலை முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
முட்டம் - அம்மாண்டிவிளை சாலையில் செல்லும் போது பைக் திடீரென நிலை தடுமாறியது. இதில் கீழே விழுந்த அலக்சாண்டர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு முட்டத்தத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்த அவரது மனைவி புஷ்ப சகிதா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.