குக்கர் சின்னம் நல்லபடியாக ரீச் ஆகி வருகிறது:டிடிவி தினகரன் மனைவி

டிடிவி தினகரன் மனைவி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி, ஏ.இராமநாதபுரம், கன்னியம்பட்டி, செம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்டிஏ கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன்-யை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா டிடிவி தினகரன் மக்களை நேரில் சென்று சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராதா டிடிவி தினகரன்., எல்லா இடங்களிலும் டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது, மக்கள் அவரை மறக்கவே இல்லை., நீங்கள் வந்தால் போதும் நீங்கள் தான் ஜெயிக்க வேண்டும் என சொல்கின்றனர்., குக்கர் சின்னம் நல்லபடியாக ரீச் ஆகி வருகிறது., ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தால், அவரை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்., நாங்களும் குக்கர் சின்னம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.,
டிடிவி தினகரனையும், தங்கதமிழ்ச்செல்வனையும் யார் குரு என சொன்னார்கள், சிஷ்யன் என சொன்னது யார்., அந்த மாதிரி ஒன்றும் இல்லை., மக்களிடமும் அந்த மாதிரி எண்ணம் இருப்பதாக தெரியவில்லை., வரலாற்றிலேயே அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.,
கண்டிப்பாக அது நடக்கும் என நம்பிக்கை உள்ளது, மக்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர்., என பேட்டியளித்தார்.
