கூல் லிப் பதுக்கியவர் கைது!

கூல் லிப் பதுக்கியவர் கைது!

கூல் லிப் பதுக்கியவர் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட (கூல் லிப்) புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மேலூர் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் கந்தசாமி (41) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கந்தசாமியை கைது செய்து அவரிடமிருந்த ரூ.19,000 மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட கந்தசாமி மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story