கூட்டுறவு மேலாண்மை பயிற்சி தேர்வு - விண்ணப்பிக்க அறிவிப்பு
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வலியுற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டய பயிற்சி பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வு எழுதி வரும் டிசம்பர் 2025க்குள் தேர்ச்சி பெற வேண்டும். எனவே கடந்த 202ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 7 பாடங்கள் கொண்ட முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நடத்தப்பட்டு வந்தது.
2022 ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின்படி 10 பாடங்கள் இரண்டு பருவ முறைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. பழைய பாடத்திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாலும், தற்போது புதிய பாடத்திட்ட தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளதினாலும் பழைய பாடத்திட்டங்கள் முடிவிற்கு கொண்டு வரப்படுகிறது. எனவே பழைய பாடத்திட்டத்தின்படி ஏழு பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியளர்கள் துணை தேர்வு எழுதி டிசம்பர் 2025 க்குள் தேர்ச்சி பெற இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு நடைபெறும் துணை தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறாத பயிற்சியளர்கள் இனி வருங்காலங்களில் புதிய பாடத்திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மைப்பட்டு பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே கூட்டுறவு மேலாண்மை பட்டையை சார்ந்த வழங்கப்படும். மேலும் துணைத் தேர்வுகள் எழுத நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் வந்து அல்லது 04652 - 278132 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.