எடப்பாடியில் விவசாயிகளிடம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர் பேச்சுவார்த்தை

எடப்பாடியில் விவசாயிகளிடம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர் பேச்சுவார்த்தை

விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை

எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி கூட்டுறவு வங்கியில் சங்க இணை பதிவாளர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது சங்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகை கடன் வழங்கியது பயிர் கடன் தள்ளுபடி செய்தது மற்றும் வைப்புத் தொகை பெற்றது போன்றவற்றில் மூன்று கோடிக்கு மேற்பட்ட தொகையை வங்கி ஊழியர்கள் மற்றும் தலைவர் நிர்வாக குழு உறுப்பினர்கள் கையாடலில் ஈடுபட்டதால் வங்கி உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வைப்பு தொகை அடகு வைக்கப்பட்ட நகை பயிர் கடன் ஆகியவை வழங்கப்படவில்லை.

மூன்று ஆண்டுகளாக போராடியும் வைப்புத் தொகை அடகு வைக்கப்பட்ட நகையை திருப்பி வழங்கப்படவில்லை இதனால் வங்கி உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி வங்கி முன்பு உண்ணாவதம் இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெள்ளரி வெள்ளி தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு இன்று வருகை தந்தார்.

கூட்டுறவு வங்கியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை மற்றும் நிர்வாகிகளுடன் இணை பதிவாளர் ரவிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன் 800 நபர்களுக்கு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

டெபாசிட் செய்யப்பட்ட தொகை தொடர்பாக அடுத்த வாரம் விசாரணை மேற்கொண்டு டெபாசிட் தொகை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் நகை கடன் பெற்றவர்களின் நகையை திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பரமசிவம், கூட்டுறவு சங்கத்தின் செயல் ஆட்சியர் கவிதா மற்றும் பாதிக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story