தெருநாய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தெருநாய்களை கட்டுப்படுத்த  ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

சங்ககிரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதிகளில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த பிராணிகள் வதை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.. இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் உஷா சங்ககிரி நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிககரித்துள்ளதையடுத்து பொதுமக்கள், பல்வேறு சமூக ஆர்வலர்களிடமிருந்து

தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பேரூராட்சி கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்றார். மேலும் சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கமுத்து, சங்ககிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகன் ஆகியோர் சங்ககிரியில்

தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், நடைபயிற்சி செல்வோர்களை கடித்து வருகின்றது.மேலும் சாலையில் குறுக்கே திடீர் என்று செல்வதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்துகுள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்கள் நாய்களை கட்டுப்படுத்த கால்நடை துறை மூலம் அவைகளுக்கு கருத்தடை செய்து சங்ககிரியை அடுத்த மொத்தையனூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நாய்கள்

மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தி பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றி தெருநாய்களை கொண்டு சென்று வளர்க்க வேண்டும் எனவும் மேலும் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு பேரூராட்சி சார்பில் உரிய அனுமதி பெற்று வளர்க்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினர். அப்போது சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, வடுகப்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன்,

வருவாய் ஆய்வாளர்கள், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் சண்முகம், அமுதசுடர் அறக்கட்டளை தலைவர் சத்யபிரகாஸ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story